முடியும் என நிரூபித்திருக்கிறார் தினேகா என்ற இந்த மாணவி.
குமுதம் ரிப்போர்ட்டரில் அந்த அதிரடி மாணவி பற்றிய செய்தி வந்திருக்கிறது. நண்பர் கரூர் அரவிந்த் தான் இதை எழுதியிருக்கிறார். அருமையான ஸ்டோரி.
கரூரில் P.A.vidya Bhavan என்ற பள்ளியில் படிக்கும் மாணவி தினேகா. பீஸ் கட்ட தந்தை கஷ்டப்படுவதைப் பார்த்து தவித்துக் கொண்டிருந்திருக்கிறார். பள்ளி நிர்வாகமோ கொஞ்சம் கூட இரக்கம் காட்டவில்லை.
இறுதியில் கல்வி கொள்ளையர்களுக்கு எதிராக பெற்றோர்கள் கையில் எடுக்க தயங்கும் விசயத்தை ஒரு மாணவியான இவர் செய்திருக்கிறார்.
வெறும் பத்து ரூபாய் காசை கையில் வைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று தன் பள்ளியில் நடக்கும் கல்விக் கொள்ளையை அம்பலப்படுத்திவிட்டு வந்திருக்கிறார்.
கலெக்டர் அலுவலகம் உடனடி நடவடிக்கையில் இறங்க பள்ளி நிர்வாகம் பதறிப்போய் வந்திருக்கிறது. இறுதியில் பள்ளி நிர்வாகம் மாணவியை சமாதானம் செய்ய ஒரு ஆஃபரை வீசியிருக்கிறது..
அதை புறங்கையால் தள்ளிவிட்டு அந்த பெண் வந்ததை படித்தபோது நிஜமாகவே சிலீர்ப்பாக இருந்தது.. பெருமையாக இருந்தது.
இன்று அரசுப்பள்ளியில் படிக்கும் இந்த மாணவி எதிர்காலத்தில் ஒரு முக்கியமான ஆளுமையாக வருவார் என உறுதியாக சொல்வேன்..
வாழ்த்துகள் தினேகா..
-கார்ட்டூனிஸ்ட் பாலா
நன்றி:https://www.facebook.com/%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-468760809962708/

No comments:
Post a Comment