Tuesday, April 30, 2013

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே.9 ம் தேதி !


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே.9 ம் தேதி அன்றும்,பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.31ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 4 முதல் வழங்கப்படும்


தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 4 முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் அறிவித்துள்ளார். மே 20ஆம் தேதி வரை பொறியியல் படிப்பு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

Thursday, April 18, 2013

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை




சிறுபான்மையின மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் 2012-2013 கல்வியாண்டிலிருந்து ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகைக்கு வின்ணப்பிக்கும் முறை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Wednesday, April 17, 2013

TN PLUS TWO MARCH 2013 QUESTION PAPER DOWNLOAD

B.S.A. பல்கலையில் பி.ஏ. இஸ்லாமிக் ஸ்டடி



+2 முடித்தவர்கள் அல்லது அல்குர்ஆனை இயல்பாக படிக்கும் மாணவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம். இந்தாண்டு முதல் விசேடமாக பி.ஏ. இஸ்லாமிக் இளங்கலை வகுப்பை பகுதி நேரமாகவும்,

மாலை நேரத்தில் சேர்ந்து படிக்கும் வகையிலும் சிறப்பு ஏற்பாட்டை பி.எஸ்.ஏ. அப்துர்ரஹ்மான் பல்கலைக்கழகம் செய்துள்ளது.

எஸ்சி, எஸ்டி, மாணவர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி?;12-5-2013 அன்று சென்னையில் பயிற்சி




எஸ்சி, எஸ்டி, பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் முதல் வகுப்பில் (60% க்கு மேல் ) தேர்ச்சி பெற்றிருப்பின், பல்வேறு உதவித்தொகைகளை திராவிட நலத்துறை வழங்கப்பட உள்ளது

BRIGHT STUDENTS AWARD
பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலியே முதல் மாணவராக வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதினை ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் வழங்குவார். 

Tuesday, April 16, 2013

SSLC மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸ்!



சமீபத்தில் நடந்து முடிந்த அரசு பொது தேர்வுகளின்போது பொறுப்பற்ற சில மனிதர்களின் பல்வேறு குளறு படிகளால் மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி வெளியாகி இருந்தது.  
இந்நிலையில், பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் கடினமாக இருந்தது குறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸாக வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.