Saturday, January 9, 2016

வெறும் பத்து ரூபாயை கையில் வைத்துக் கொண்டு கல்விக் கொள்ளையர்களின் அடாவடி ஆட்டத்தை அடக்க முடியுமா..?





முடியும் என நிரூபித்திருக்கிறார் தினேகா என்ற இந்த மாணவி.

குமுதம் ரிப்போர்ட்டரில் அந்த அதிரடி மாணவி பற்றிய செய்தி வந்திருக்கிறது. நண்பர் கரூர் அரவிந்த் தான் இதை எழுதியிருக்கிறார். அருமையான ஸ்டோரி.

Tuesday, April 30, 2013

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே.9 ம் தேதி !


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே.9 ம் தேதி அன்றும்,பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.31ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 4 முதல் வழங்கப்படும்


தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 4 முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் அறிவித்துள்ளார். மே 20ஆம் தேதி வரை பொறியியல் படிப்பு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

Thursday, April 18, 2013

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை




சிறுபான்மையின மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் 2012-2013 கல்வியாண்டிலிருந்து ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகைக்கு வின்ணப்பிக்கும் முறை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.