Sunday, March 24, 2013

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 1–ந் தேதி முதல் பிளஸ்–2 தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 5,769 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.


இந்த நிலையில் வரும் 27 ஆம் தேதியுடன் அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வு முடிவடையும் நிலையில், இன்று திங்கட் கிழமை முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப் படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.


தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வரலாறு, வேதியியல், கணக்கு பதிவியல், உயிரியல், பொருளாதாரம் போன்ற பாடத்தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், இதர பாடங்களுக்கான தேர்வுகளும் 27–ந் தேதியுடன் முடிகிறது. முதலில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் திருத்தப்படுகிறது. முதன்மைத் தேர்வாளர் உதவித் தேர்வாளர் என இரு பிரிவுகளில் ஒவ்வொரு விடைத்தாளும் திருத்தப் படும். ஒவ்வொரு பாடத்திலும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அனைத்து மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

source: inneram.com

No comments:

Post a Comment